மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- சிவப்பு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- சிவப்பு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட கூடும் என சிவப்பு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது

இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் (60–70) கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும் எனவும் சில நேரங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )