அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது

அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 7 சந்தேகநபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அகழ்வுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 24 முதல் 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )