
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் -அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் விடுத்த எச்சரிக்கைகளை மீறிச் செயல்பட்டதால், ஜாஸ்க் (Jask) தீவுக்கு அருகில் வைத்து அமெரிக்கப் போர்க்கப்பல் மீது இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போர்க்கப்பல் அந்தப் பகுதியிலிருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஹோர்முஸ் நீரிணைக்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைவதைத் தடுத்ததாக ஈரான் கடற்படை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சம்பந்தப்பட்ட கடல் எல்லைப் பகுதியில் உள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

