
டெங்கு பரவல் அதிகரிப்பு ; 12 உயிரிழப்புகள்
நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சமூக மருத்துவர் டாக்டர் பிரஷிலா சமரவீர, உயிரிழந்த இரண்டு குழந்தைகளும் கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.
இதேவேளை, நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 25,846 டெங்கு நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மழைக்காலம் மற்றும் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

