அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால் ஈரான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் – ட்ரம்ப் எச்சரிகை

அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால் ஈரான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் – ட்ரம்ப் எச்சரிகை

ஹோர்முஸ் நீரிணை அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின் போது, ஈரானிய பேச்சாளர்கள் முன்னரை விட தற்போது சற்று நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ,

”ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்க இராணுவம் ஏழு ஈரானிய படகுகளை சுட்டு வீழ்த்தியுள்ளது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான எச்சரிக்கைகளை விடுத்திருந்த ட்ரம்ப், ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

தற்போது தனது முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளது .நல்லெண்ணத்தின் அடிப்படையில் புதிய உடன்படிக்கை ஒன்றை எட்டுவது.அல்லது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது.எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் கடும் சோதனைக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )