தமிழகத் தேர்தல் வெற்றி ; யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கொண்டாட்டம்

தமிழகத் தேர்தல் வெற்றி ; யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கொண்டாட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.நகர் பகுதியில் நேற்று (04) மாலை திடீரென ஒன்றிணைந்த இளைஞர்கள் குழு, தமிழக வெற்றிக்கழகக் கொடிகளை ஏந்தி வெடிகொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, காக்கைதீவு பகுதியிலும் தமிழக வெற்றிக்கழகக் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )