48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட GMOA தீர்மானம்

48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட GMOA தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் அறிவிப்பின்படி, இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை (23) காலை 8.00 மணிமுதல் 48 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பின் போது அவசர சிகிச்சை சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படுமா என்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )