அனுமதியின்றி மரக்குற்றிகள் கடத்தல் ; சாரதி கைது

அனுமதியின்றி மரக்குற்றிகள் கடத்தல் ; சாரதி கைது

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இன்று காலை மீசாலை பகுதியில் குறித்த பாரவூர்தி மறித்து சோதனை செய்யப்பட்டது.

அப்போது, சாரதி சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் இருந்த பாரவூர்தியை கைவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் பாரவூர்தி பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )