மின்சார சபை ஊழியர்களுக்கு இரு கட்டங்களில் இழப்பீடு வழங்கப்படும்

மின்சார சபை ஊழியர்களுக்கு இரு கட்டங்களில் இழப்பீடு வழங்கப்படும்

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு முறையின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக இழப்பீடு வழங்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், எரிசக்தி அமைச்சருமான அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, மொத்த இழப்பீட்டில் முதல் 50 சதவீதம் திறைசேரி நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான ஆவணம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது வரும் வாரத்திற்குள் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, முதல் கட்டமாக 50 சதவீத இழப்பீடு இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், மீதமுள்ள தொகை குறுகிய காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )