
நாளை முதல் பயணச் சீட்டு இன்றி பயணித்தால் அபராதம்
பயணச் சீட்டு இன்றி பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதன் செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை முதல், மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தின் போது பயணசீட்டுக்களை தம்வசம் வைத்திருப்பது கட்டாயமானதாகும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
CATEGORIES Sri Lanka

