உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அவர்களின் செலவு அறிக்கைகளைத் தனித்தனியே அந்தந்த மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )