
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் பெயரில் பிரதேச செயலக அலுவலகங்களை ஜேவிபி மயமாக்குவதற்கு எதிராக குரல் எழுப்பிய அஷான் கோட்டேவத்த கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறேன் -சஜித்
தெஹிவளை தொகுதியைச் சேர்ந்த இளம் செயற்பாட்டாளரான அஷான் கோட்டேவத்த கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.
பேச்சுச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பன அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக அமைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு இருக்கத் தக்க 220 இலட்சம் மக்களின் தகவல் அறியும் உரிமையை நிலைநாட்டும் வகையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் அலுவலர்களாக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் அரச நியமனங்கள் மூலம் நியமிக்கப்பட்ட அலுவலர்கள், அந்தத் வேலைத்திட்டம் ஊடாக சகல பிரதேச செயலக பிரிவுகளையும் ஜேவிபி மயமாக்கப்பட்டு வருவதனை அஷான் கோட்டேவத்த அவர்களே நாட்டுக்கு வெளிக்கொணர்ந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொலிஸாரினால் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் அஷான் கோட்டேவத்தை அவர்களைச் சந்திப்பதற்கு தெஹிவளை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (06) காலை சென்ற வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்சமயம் நாட்டின் சகல பிரதேச செயலகங்களும் மாவட்ட செயலகங்களும் ஜேவிபி மயமாக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்தமையினாலயே அவர் அரசியல் இலக்காக்கப்பட்டுள்ளார். நகர சபை உறுப்பினரின் ஓருவரின் வேண்டுகோளின் பேரில், நகர சபை அலுவலர் ஒருவரிடம் சென்று, அந்த உறுப்பினர் அலுவலருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவல்களை பிரதியிட்டு மீண்டும் அவருக்கு வழங்கியது மட்டுமே அஷான் செய்தார்.
இது திருட்டல்ல, மாறாக இது ஜனநாயக உரிமையை பயன்படுத்தும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அஷான் கோட்டேவத்தவின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டதற்கு எதிராக, ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கக்கூடிய உயர்ந்த பட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.
இத்தகைய சிறிய விடயத்தை வைத்து இவ்வாறு பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருப்பது ஜனநாயக விரோத போலவே இழிவான செயலுமாகும்.
இந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த செயலுக்காக பாராளுமன்றத்தினுள்ளும் வெளியிலும் மேற்கொள்ளக்கூடிய சகல ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.
இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முன்நின்றுள்ளது என்றும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவி

