நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ மழை

நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ மழை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டல நிலை அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு தாழ்வழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் நாட்டில் நிலவும் மழைப்பொழிவு அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய அமைப்பின் தாக்கத்தால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் , சபரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )