
தமக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி அனுராவிற்கு நன்றி கூறியதமிழக முதல்வர் விஜய்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு முதலமைச்சர் விஜய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் விஜய் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
முதலமைச்சர் விஜய்யின் பதிவு
“இலங்கை ஜனாதிபதி மாண்புமிகு அணுர குமார திஸாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். உங்கள் கனிவான செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.”
இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே ஆழமாக வேரூன்றியுள்ள வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள் ரீதியிலான உறவுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
இரு பிராந்தியங்களும் பல தலைமுறைகளாகப் பகிரப்பட்ட பாரம்பரியம், வணிகம் மற்றும் நீண்டகால உறவுகளால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், தமிழ்நாடும் இலங்கையும் பொருளாதார ரீதியாக இணைந்து செயல்படுவதன் மூலம் இரு தரப்பும் பயனடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்குள் நெருக்கமான ஈடுபாடு கொள்வது, இரு நாடுகளின் பரஸ்பர செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

