பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் வெளியீடு

பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் வெளியீடு

‘ஐடெண்டிட்டி’, ‘நரிவேட்டை’, ‘லோகா’ படங்களின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் பள்ளிச்சட்டம்பி விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1950-களின் காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘காட்டு செண்பகம்’ எனும் வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )