கண்டியில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் தற்காலிக பாலம் அமைத்தல்

கண்டியில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் தற்காலிக பாலம் அமைத்தல்

கனமழை காரணமாக கடுமையாக சேதமடைந்த கண்டியில் உள்ள ரந்தேனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைக்கும் பணி, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், இந்திய மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் தற்காலிக பாலத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இராணுவத்தின் பங்களிப்புடன் தற்காலிக பாலம் அமைக்கப்பட்ட பின்னர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாலம் வாகனப் போக்குவரத்துக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )