
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 820 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (12) விரிவான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நடவடிக்கைகளில் சுமார் 820 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 823 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நால்வரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைகளின்போது சந்தேகநபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன:
- 331 கிராம் ஹெரோயின்
- 2 கிலோ 247 கிராம் ‘ஐஸ்’
- 25 கிலோ 247 கிராம் கஞ்சா
- 4,258 கஞ்சா செடிகள்
- 47 கிராம் ஹஷீஷ்
- 2,143 போதை மாத்திரைகள்
- 187 கிராம் 869 மில்லிகிராம் மதனமோதகம்
- 1 கிலோ 05 கிராம் ‘மாவா’
போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடிக்கும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

