சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர் உயிரிழப்பு

பிடிகல – பெலவத்த வீதியின் கரவ்வ 15ஆம் மைல்கல் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள், பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த 21 வயதுடைய இளைஞர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இஹல ஹேவஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்த ஒரு திறமையான மாணவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்றைய கடும் மழையில் தனது வேலைக்காகச் சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )