
மண்சரிவு அபாயம் : கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை – கம்பளை (B 431) பிரதான வீதி இன்று (14) முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் பரகம்மன பகுதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் மேலதிக மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த பிரதான வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீதிமூடல் காரணமாக, வாகன சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

