சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை02 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை02 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையால்நாட்டின் பல மாவட்டங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை 6 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )