இன்று முதல் வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி

இன்று முதல் வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்க இறக்குமதி வரியின் மீது 50% கூடுதல் வரியை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனத்தின் மீது இதுவரை விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% கூடுதல் வரி விதிக்கப்படும்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த 50% சதவீத கூடுதல் வரி இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.

இருப்பினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )