
கொஸ்கமவில் நீரில் மூழ்கி 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கொஸ்கமவின் தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம சாலாவ மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிரேதப் பரிசோதனை மற்றும் உடற்கூறு ஆய்வு அவிசாவெல்ல மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பாக கொஸ்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

