போதைப்பொருளுடன் இருவர் கைது

போதைப்பொருளுடன் இருவர் கைது

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16)கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )