பாதங்களில் வீக்கம், வெடிப்பு உள்ளதா ?

பாதங்களில் வீக்கம், வெடிப்பு உள்ளதா ?

உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை முன்கூட்டியே எச்சரிக்கும் தன்மை பாதங்களுக்கு உண்டு. ஆரம்பத்தில் அமைதியான முறையில் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதனை புறக்கணிப்பது கடுமையான பாதிப்புக்கு வழிவகுக்கக்கூடும்.

குறிப்பாக பாதங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் அது ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருப்பதை உணர்த்தலாம். இரவில் பாதங்களில் தசைப்பிடிப்புகள் அடிக்கடி ஏற்பட்டால் உடலில் மெக்னீசியம் அளவு குறைந்திருப்பதை குறிக்கலாம்.

கால், விரல்கள் மரத்து போனாலோ, உள்ளங்காலில் அரிப்பு ஏற்பட்டாலோ, பாத வலி உண்டானாலோ நரம்புகளின் ஆரோக்கியம் பலவீனமடைவது, வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது, ரத்த ஓட்டத்தில் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

பாதங்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய எளிய பழக்கங்கள்:

* பாதங்களில் வீக்கம், நிற மாற்றம் அல்லது வெடிப்பு உள்ளதா என சரிபார்க்கவும்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

* மெக்னீசியம், வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்ணவும்.

* தூங்க செல்லும் முன்பு கால்களையும், பாதங்களையும் நீட்டி பயிற்சி செய்யுங்கள்.

* பாதங்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருங்கள்.

* சவுகரியமான, வசதியான காலணிகளை அணியுங்கள். இறுக்கமான காலணிகளை தவிர்க்கவும்.

* கரடுமுரடான நிலப்பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பதை தவிர்க்கவும்.

* தினமும் பாதங்களை பராமரிப்பதற்கு 2 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.

* ஆரம்ப நிலையிலேயே பிரச்சனைகளை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )