நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு மரக்கறிசந்தையை இடமாற்ற வேண்டும் ; பருத்தித்துறை நகரசபை தவிசாளரிடம் மகஜர் கையளிப்பு

நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு மரக்கறிசந்தையை இடமாற்ற வேண்டும் ; பருத்தித்துறை நகரசபை தவிசாளரிடம் மகஜர் கையளிப்பு

பருத்தித்துறை மரக்கறி சந்தையினை இடமாற்ற வலியுறுத்தி பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் செயலாளர் தாரணி கஜரூபன் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று (24) காலை ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பங்கேற்ற வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டு 9.00 மணியளவில் பேரணியாக புறப்பட்டு பருத்தித்துறை நகரசபையை சென்றடைந்து கோசங்கள் எழுப்பி போராட்டம் இடம்பெற்றது. 

தொடர்ந்து காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க பிரதிநிகளினால் நகர சபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் செயலாளர் தாரணி கஜரூபன் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள், பருத்தித்துறை நகர் முச்சக்கர வண்டி சேவை சங்கத்தினர், மரக்கறி வியாபாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். 

செயலாளர் வெளியே வர மறுத்த நிலையில் நகரசபை வாயிலில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதுடன் மரக்கறி வியாபாரி ஒருவர் செயலாளர் வெளியே வந்து மக்களை சந்திக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்திருதார். 

இதையடுத்து செயலாளர் வெளியே வந்து தவிசாளருடன் இணைந்து மகஜரினை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )