யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது. 

சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் உடைமைகளையும் தவறான முறையில் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )