
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.
அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் இந்த கோவிலின் அருகேயுள்ள கடல் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று (05) பெளர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.
CATEGORIES India

