வடக்கு ஈராகில் “தீவிரவாத குழுக்களை” தாக்கியதாக ஈரான் அறிவிப்பு

வடக்கு ஈராகில் “தீவிரவாத குழுக்களை” தாக்கியதாக ஈரான் அறிவிப்பு

வடக்கு ஈராகில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற “எதிர்ப்புரட்சிகர தீவிரவாத குழுக்கள்” மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

IRGC-இன் ஹம்ஸே சையத் அல்-ஷுஹதா கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் குழுக்கள் பெரியளவிலான அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை நாட்டுக்குள் கடத்த முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆயுதக் களஞ்சியம் ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் இலக்காக வைத்து தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின் போது பெருமளவிலான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக IRGC தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )