சிலாபம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு ; 03 பேர் கைது

சிலாபம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு ; 03 பேர் கைது

சிலாபம், ஜயபிம கலப்பு மற்றும் பங்கதெனிய வாவி பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெருமளவான கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (07) சிலாபம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, சுமார் 1,520 லீற்றர் கோடா மற்றும் செப்புச் சுருள் ஆகியவற்றுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 590 லீற்றர் கோடாவுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் 29, 39 மற்றும் 60 வயதுடையவர்களாகவும், சிலாபம் மற்றும் மேல் பங்கதெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )