
தேசிய ரணவிரு நினைவு தின விழாவையொட்டி இன்று 3:30 முதல் கொழுப்பில் ஓட்டுநர்களுக்கான மாற்று வழிகள்
இன்று (19) தேசிய ரணவிரு நினைவு தின விழா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறை (பொலிஸ்) அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்தூவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, சந்தர்ப்பதிற்கு ஏற்ப பின்வரும் மாற்று வழிகளுக்குத் திருப்பிவிடப்படும்.
மாற்று வழிகள் –
நாடாளுமன்ற வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் – பொல்தூவ சந்தியிலிருந்து பத்தரமுல்ல, பாலந்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும்.
கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் – பாலந்துன, பத்தரமுல்ல ஊடாக பயணிக்க முடியும்.
ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் – பத்தரமுல்ல வீதியை வந்தடைந்து, அங்கிருந்து தங்களுக்குத் தேவையான வீதிகள் ஊடாக பயணிக்க முடியும்.
பேருந்துகள் மற்றும் லாரிகள் (Trucks) நிறுத்துவதற்கான இடங்கள் –
1 ஜப்பான் நட்பு வீதி (Japan Friendship Road) சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை.
2 ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகில் இருந்து பெலவத்த வரை.

