NTRNeel படத்தின் ரிலீஸ் திகதிஅறிவிப்பு

NTRNeel படத்தின் ரிலீஸ் திகதிஅறிவிப்பு

கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

NTR-31′ படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. ஏப்ரல் 22 ஆம் திகதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்துக் கொண்டார். இப்படத்திற்காக NTR 15 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை {மே 20} முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )