
ரணவிரு நினைவு தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்காமைக்கான காரணம் – அமைச்சர் விஜித ஹேரத் பதில்
‘தேசிய ரணவிரு நினைவு தின விழா’ ஜனாதிபதி மற்றும் சில அமைச்சர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த–மையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (19) தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
“இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது, உண்மையில் பார்த்தால் இதில் கலந்துகொள்வது ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர , அதேபோன்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்குப்பதிலாக பிரதி அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் பொலிஸாரைத் தவிர அரசியல் அதிகாரத்தைச் சேர்ந்த வேறு எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை” என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

