
அகமதாபாத் விமான விபத்து ; சீன ஜனாதிபதி இரங்கல்
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787-8 விமானம் நேற்று முன்தினம் (12) சுமார் 242 பயணிகளுடன் அருகில் இருந்த ஜே.பி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் மாணவர் விடுதி கட்டிடத்தில் விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் உட்பட 265 பேர் உயிரிழந்தனர்.
அந்தவகையில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது இரங்கல் செய்தியில்,
‘விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

