
சுரேஷ் சலே கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இன்று (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை நீதிமன்றத்திற்குக் அழைத்து வந்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

