
IPL இறுதிக்கட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு ?
இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் லீக் சுற்றில் இந்த ஆறு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றின் கடைசி இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்கும் இன்னும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதேவேளையில், மிகவும் மோசமான நெட் ரன் ரேட் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளேஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றால் நேரடியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் பெறுபேறுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகும்.
13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, தனது இறுதிப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கட்டாயம் வெல்ல வேண்டும். அதேவேளை, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளின் பெறுபேறுகளும் பஞ்சாப் அணியின் தகுதியில் தாக்கம் செலுத்தும்.
12 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்வதுடன், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் தோல்வியடைய வேண்டிய நிலை காணப்படுகிறது.
மறுபுறம், 11 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும்.
இதேவேளை, டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களது கடைசி போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வென்றாலும், நெட்ரன் ரேட் மிகவும் குறைவாக இருப்பதால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமானதாக பார்க்கப்படுகிறது.

