
IMF-இலிருந்து 700 மில்லியன் டொலர் கிடைக்கும் ; அமைச்சர் அனில் ஜயந்த
சர்வதேச நாணய நிதிய அமைப்பிலிருந்து எதிர்வரும் 27ஆம் திகதி அமெரிக்க டொலர் சுமார் 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மேலாக சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார்.
அதன்படி, IMF நிர்வாக சபை அங்கீகாரம் கிடைத்தால் 700 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் இந்த ஆண்டுக்குள் 480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், உலக வங்கி மூலம் 150 மில்லியன் அமெரிக்க டொலரும், இணைப்பு நிதி நிறுவனமொன்றின் ஊடாக மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலரும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பொருளாதார மேலாண்மை எந்த சிக்கலும் ஏற்படாது என பிரதியமைச்சர் அனில் ஜெயந்த வலியுறுத்தினார்.

