லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி

லெபனான் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டயர் மாவட்டத்தின் Deir Qanoun en-Nahr நகரில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் வான்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை “டெய்ர் கானூன் என்-நார் படுகொலை (Deir Qanoun en-Nahr massacre)” என லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த வான்தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )