
30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று ஆஸ்டன் வில்லா சாதனை
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்டன் வில்லா (Aston Villa) அணி யூரோபா லீக்(Europa League) கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இஸ்தான்புலில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஃப்ரைபர்க் (Freiburg) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்டன் வில்லா (Aston Villa) சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியின் 41ஆவது நிமிடத்தில் Youri Tielemans அடித்த அதிரடி கோல் மூலம் ஆஸ்டன் வில்லா (Aston Villa) முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து முதல் பாதி நிறைவடையும் தருணத்தில், ஆஸ்டன் வில்லா அணி வீரர் Emiliano Buendia அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார்.
தொடர்ந்து இரண்டாம் பாதியில் Morgan Rogers அடித்த மூன்றாவது கோல், ஆஸ்டன் வில்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
இதன்மூலம், 1996ஆம் ஆண்டு லீக் கிண்ண வெற்றிக்குப் பிறகு ஆஸ்டன் வில்லா கைப்பற்றும் முதல் கிண்ணமாக இது அமைந்துள்ளது.
மேலும், 1982ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற பின்னர், 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய ஐரோப்பிய கிண்ணத்தை ஆஸ்டன் வில்லா வென்றுள்ளது.

