யாழில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

யாழில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கஸ்துரியார் வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை சோதனை செய்தபோது, அவர்களிடம் 3,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியைச் சேர்ந்த, வயது 21 ஆகும் இரு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப் பொருள் விநியோகத்துக்கான நடவடிக்கைகள் மீது பொலிஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது போதைப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, பத்து மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை ரூ.3,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்குப் பின் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )