???? Breaking News : உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

???? Breaking News : உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பாஃப்ரல் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)