அதிகாரம் இல்லாதபோதும் மக்களுக்காக சேவையாற்றியவர் சஜித்  !

அதிகாரம் இல்லாதபோதும் மக்களுக்காக சேவையாற்றியவர் சஜித் !

நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸ மாத்திரம்தான் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்று இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் அனைவரும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே வேலைத்திட்டங்களை மேற்கொண்டார்கள்.

அபிவிருத்தி தொடர்பாக பேசினார்கள். ஆனால் சஜித் பிரேமதாஸ மாத்திரம் தான் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார்.

குறிப்பாக கல்வித்துறை,சுகாதாரத்துறைக்காக அவர் சேவையாற்றினார். எனவே சஜித்
பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆட்சியில் இந்த நாட்டில்
அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.

சமூகத்தில் ஒற்றுமையைப் பலப்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் அனைத்து விடயங்களையும் தகர்த்தெறிவோம்’
என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)