
நேபாளத்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் !
நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இந்தியா, திபெத் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.