
விவசாயிக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருந்தோம்
விவசாயிகளுக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுந்தரப்பினர்கள் கூறிய பொய்களை நம்பி தற்போது விவசாயிகள் ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அநுராம்புரம், நொச்சியாகம சமனல ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.