
1700 ரூபாய் வழங்கினால் எஞ்சிய 300 ரூபாவுக்கு என்ன நடக்கும் என அன்று கேட்ட தேசிய மக்கள் சக்தியினர் இன்று என்ன கூறப்போகின்றனர் ?
எதிர்க்கட்சியில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் போதாதெனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இப்போது அதே தொகையில் நிற்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று(04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலைமீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் ”ஆயிரத்து 700 ரூபாய் வழங்கினால் எஞ்சிய 300 ரூபாவுக்கு என்ன நடக்கும் என அன்று கேட்ட தேசிய மக்கள் சக்தியினர், இன்று என்ன கூறப்போகின்றனர் ? ” என தெரிவித்துள்ளார்.