
வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எங்கே ?
மீனவ மக்களுக்கு வழங்குவோம் என வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எப்போது வழங்கப்படும்? வரி விதிக்கப்பட்டு, திறைசேரி இந்த வரிகளை சுரண்டிக் கொண்டு, கமிசன் பெறுகிறது.
இவை நீக்கப்பட்டால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என்று ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தார். ஆனால் இன்று இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.
எரிபொருள் மானியம் வழங்கப்படும் போது, அதற்கு உரித்துடைய தரப்புக்கு, பிரிவுகளுக்கு அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது எரிபொருள் மானியம் கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் இன்று அந்த மானியங்கள் வழங்கப்படவில்லை. எல்லா விடயங்களிலும் ஏமாற்றமே நடந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.