வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய்

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய்

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. 

இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெரும, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

மேலும் அவர் “நாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோம் என்றால், இலங்கையிலும் உலகிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்க்கான தரவு மிகவும் குறைவாக இருந்தது.

ஆனால் இப்போது அது உலகிலும் இலங்கையிலும் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது.  மேலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயைத் தடுக்க வழிகள் உள்ளன. 

இதற்கு முக்கிய காரணம் நமது மோசமான உணவுப் பழக்கமும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாததும் ஆகும். அத்துடன் வயோதிபர்கள் ஆவது. 

வயதுதான் நோய்க்குக் காரணம் என்பதல்ல. வயதுக்கு ஏற்ப ஆபத்து காரணிகளின் குவிப்பு அதிகரிப்பதால், இந்த நோய் வயதானவர்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. இலங்கையில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 ஆண்களும் 1,500 பெண்களும் இந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)