
பேருந்து மற்றும் ரயில் சாரதிகளாக பெண்களை பணியமர்த்த தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர், “நாளை (8) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு எமது அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர்களாக, ரயில் சாரதிகளாக, பாதுகாவலர்களாக பெண்களை இன்னும் சில நாட்களில் பார்க்க முடியும். நாளைய மகளிர் தினத்திற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை பேருந்துகளை பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கனவும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.