ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்குள் நுழைந்திருப்பதால், அதன் பரிந்துரைகள் மற்றும் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்பட வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி வரவு செலவு கட்டுப்பாடுகளின் கீழ் முன்னுரிமைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன்,அந்த இக்கட்டான நிலைக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு பெருமளவில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

தொழில்வாண்மையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு நல்லதொரு புரிதல் இருப்பதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரினதும் உரிமைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அநுருத்த கருணாரத்ன, செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த.பீ.இலங்கசிங்க உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பிரிதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)