
எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு
மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கரந்தகொல்ல – 12ஆவது கிலோமீட்டருக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகக் குறித்த வீதி கடந்த 14 ஆம் திகதி அதிகாலை முதல் மூடப்பட்டது.
இந்நிலையில், இந்த வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka