இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் சுற்றுலா வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நாட்டின் பொதுப் போக்குவரத்து முறைமையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் போன்ற பல துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )